விழுப்புரம்: சென்னையை சேர்ந்த பிரபல நடிக்கைக்கும், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் 2018ஆம் ஆண்டு முதல் திரைப்பட தொழில் தொடர்பாக நட்பு ஏற்பட்டுள்ளது. அந்த இளைஞர் தன்னிடம் திரைப்பட தொழில் தொடங்குவதற்காக கோடிக்கணக்கில் பணம் பெற்று திரும்பத் தராமல் இருந்ததாகவும், தன்னுடன் ஒன்றாக இருந்தபோது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட நடிகை 15 பக்கங்கள் கொண்ட புகாரை, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேற்று (ஆக. 29) அளித்தார்.
அதோடு ஆரோவில் அருகே உள்ள தனக்கு சொந்தமான வீட்டில் பாலியல் தொல்லை கொடுத்தாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். அதனடிப்படையில் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவரின் பெயர் பாவெந்தர்சிங் தத் (36) என்பது தெரியவந்துள்ளது.