தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

ஒன்றரை வயது குழந்தையைக் கொன்ற தந்தைக்கு தூக்கு!

ஒன்றரை வயது மகளைக் கொன்ற தந்தைக்கு கர்நாடக மாநில கடக் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பினை நீதிபதி ராஜசேகர் வி பட்டீல் வழங்கினார்.

குழந்தையைக் கொன்ற தந்தைக்கு தூக்கு
குழந்தையைக் கொன்ற தந்தைக்கு தூக்கு

By

Published : Feb 19, 2021, 7:10 PM IST

கடக் (கர்நாடகம்): பெண் குழந்தையை கொலை செய்த தந்தைக்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடக் மாவட்டத்தில் ரோனா தாலுகாவின் ஹுல்லுரா கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்தா கவுடா பாட்டீலின் மரண தண்டனை தீர்ப்பை நீதிபதி ராஜசேகர் வி பாட்டீல் வழங்கினார்.

குற்றவாளியான பிரசாந்தா, 2012ஆம் ஆண்டில் ஒரு இஸ்லாமியப் பெண்ணை மணந்தார். பின்னர் ஒவ்வொரு நாளும் இவர் தன் மனைவியைக் கொடுமைப்படுத்தியுள்ளார். இதற்கிடையில் கர்ப்பிணியான இவரது மனைவி, கணவனின் கொடுமையால் மகளிர் மறுவாழ்வு மையத்தில் வைத்து பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

குழந்தை பிறந்த பிறகு, பிரசாந்தாவை அழைத்து பேசிய அலுவலர்கள் அவருக்கு அறிவுரைக் கூறி, மனைவியையும் குழந்தையையும் உடன் அனுப்பி வைத்தனர். சில வாரங்கள் சுமூகமாக கடந்த உறவில், மீண்டும் பிரச்னை துளிர்விட்டது. மனைவியை மீண்டும் கொடுமைப்படுத்தினார் பிரசாந்தா.

இதனைத் தாங்க முடியாத அந்த பெண், மகளிர் மறுவாழ்வு மையத்தின் மூலமாக நீதிமன்றத்தை நாடினார். வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் வேளையில், பிரசாந்தா தனது மகளை ஏப்ரல் 6, 2015 அன்று கஜேந்திரகாட் அருகே உள்ள கலகலேஸ்வர மலைக்கு அழைத்துச் சென்று கொலை செய்தார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் பிரசாந்தாவை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தியதை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். மாவட்ட நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருந்த வழக்கில் இவரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு மரண தண்டனை வழங்கி நீதிபதி தீர்பளித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details