தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

தொடர்ந்து மாயமாகும் சுயேச்சை வேட்பாளர்! - missing news

புதுச்சேரி மாநிலம் ஏனாம் தொகுதியின் சுயேச்சை வேட்பாளர் பொம்மடி மீண்டும் மாயமாகியுள்ளார்.

independent candidate missing in yenam puducherry
independent candidate missing in yenam puducherry

By

Published : Apr 8, 2021, 7:49 PM IST

புதுச்சேரி: ஏனாம் தொகுதியின் சுயேச்சை வேட்பாளர் பொம்மடி மீண்டும் மாயமாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தின் முக்கியப் பகுதியாக ஏனாம் உள்ளது. இங்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமி போட்டியிட்டார். இவருக்கு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் முழு ஆதரவு தெரிவித்து அதற்குரிய தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார்.

இதே வேளையில் ஏனாம் தொகுதியில் சுயேச்சையாக களம் கண்டார் துர்க்கா பிரசாத் பொம்மடி. இச்சூழலில் துர்க்கா பிரசாத் பொம்மடி ஏப்ரல் ஒன்றாம் தேதி திடீரென மாயமானார். அவர் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டதாக அப்போது கூறப்பட்டது.

இதையடுத்து அவர் அச்சம்பள்ளி ரயில்வே மேம்பாலம் அருகே ஏப்ரல் 4ஆம் தேதி காயங்களுடன் மீட்கப்பட்டு, காக்கிநாடா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய அவர், தற்போது மீண்டும் மாயமாகியுள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையடுத்து ஏனாம் காவல் துறையினர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மாயமான சுயேச்சை வேட்பாளரை தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details