தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

ஆபாச வீடியோ - குண்டர் சட்டத்தில் கைது - tuticorin crime

பெண்ணின் புகைப்படத்தை ஆபாச காணொலியாக உருவாக்கி, சமூக வலைதளங்களில் பரப்பியவரை குணடர் சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர்.

spreading pornographic video
spreading pornographic video

By

Published : Jul 28, 2021, 7:22 AM IST

தூத்துக்குடி: பெண்ணின் ஆபாச காணொலியை சமூக வலைத்தளங்களில் பரப்பிய செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நாசரேத் உடையார் குளத்தைச் சேர்ந்த பலவேசம் (43) மே மாதம் பெண்ணொருவரின் புகைப்படத்தை ஆபாச காணொலியாக சமூக வலைத்தளங்களில் பரப்பி அந்த பெண்ணுக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் மேற்பார்வையில், மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பலவேசத்தைக் கைது செய்தனர்.

சீட்டு நடத்தி பணம் மோசடி செய்த பெண் - புகார்

பலவேசத்தைக் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் ஒப்புதல் அளித்ததன் பேரில், பலவேசத்தைக் காவல் துறையினர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்து திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details