சென்னையை சேர்ந்த பெண் ஒருவரது செல்போன் எண்ணுக்கு கடந்த மாதம் 22 ஆம் தேதி அடையாளம் தெரியாத ஒருவர் ஆபாசக் குறுஞ்செய்தி, புகைப்படம், வீடியோக்கள் அனுப்பி உள்ளார். அதோடு அந்த பெண்ணின் அவரது முகநூலில் பாலியல் தேவைகளுக்காக தொடர்புகொள்ள பயன்படுத்திக்கொள்ளவும் என்று பதிவிட்டுள்ளார். அதன்பின் அந்த பெண்ணுக்கு பல அழைப்புகள் வந்துள்ளன. இதனால் மன உளைச்சல் அடைந்த அந்த பெண், ஆகஸ்ட் 25ஆம் தேதி தியாகராயநகர் துணை ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் பிரிவிலும், எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார்.
சென்னையில் பெண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய நபர் கைது - தொடர்பு எண்ணை முகநூலில்
சென்னையில் பெண்ணுக்கு செல்போனில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியும், அவரது தொடர்பு எண்ணை முகநூலில் பகிர்ந்தும் தொல்லை கொடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.
அந்த புகாரின் அடிப்படையில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் குறுஞ்செய்தி வந்த தொடர்பு எண் மற்றும் முகநூல் கணக்கை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதனடிப்படையில் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (35) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினருக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் விரோதம் ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த காரியத்தை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க:கொல்கத்தா காதல் ஜோடி தற்கொலை வழக்கில் திடீர் ட்விஸ்ட்; பகீர் பின்னணி - 2 பேர் கைது