தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

யூடியூப் பார்த்து சாராயம் காய்ச்சியவர் கைது! - சாராயம் காய்ச்சிய நபர் கைது

கோயம்புத்தூர்: யூடியூப் பார்த்து வீட்டிலேயே சாராயம் காய்ச்சியவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Man arrested for distilling alcohol while watching YouTube!
Man arrested for distilling alcohol while watching YouTube!

By

Published : Jun 15, 2021, 4:10 PM IST

கோயம்புத்தூர் தொண்டாமுத்தூர் அடுத்த ஆலந்துறை பகுதியில் சாராய ஊரல் அமைத்துள்ளதாக பேரூர் சரக மதுவிலக்கு காவல் துறையினருக்கு நேற்றிரவு (ஜூன் 15) ரகசிய தகவல் கிடைத்ததது. அதன் அடிப்படையில் மதுவிலக்கு ஆய்வாளர் பாலமுருகன், ஆலாந்துறை காவல் துரையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அப்போது காவல் துறையினரின் வருகையை அறிந்த அடையாளம் தெரியாத கும்பல் அங்கிருந்து தப்பியோடிய நிலையில் சம்பத் குமார் என்பவர் மட்டும் காவல் துறையினரிடம் சிக்கினார். இதையடுத்து, அவரிடம் நடத்திய விசாரணையில், யூடியூப் பார்த்து வீட்டிலேயே சாராயம் காய்ச்சியது தெரியவந்தது.

இதனையடுத்து, அவரை கைது செய்த காவல் துறையினர், அங்கிருந்த ஆயிரத்து 200 லிட்டர் சாராய ஊறலை அழித்தனர். மேலும், சாராய ஊறலுக்குத் தேவையான பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details