தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

'வாரம் ஒருமுறையாவது விடுமுறை விடுங்க!' - காவலர் தற்கொலைக்கு முயற்சி! - madhurai district news

மதுரை: காவலர் ஒருவர், 'கேரளாவைப் போல் சங்கம் வேண்டாம், ஆந்திராவைப் போல் சம்பளம் வேண்டாம், வாரம் ஒருமுறை விடுமுறை விடுங்க, அதுவே என் கடைசி ஆசை' என அலுவலர்களுக்கு கடிதம் எழுதி, ஃபேஸ்புக்கில் பதிவிட்டு தற்கொலைக்கு முயன்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

madhurai police suicide attempt news
வாரம் ஒருமுறையாவது விடுமுறை விடுங்க-போலீஸ்காரர் தற்கொலைக்கு முயற்சி

By

Published : Mar 8, 2021, 3:23 PM IST

மதுரை அவனியாபுரம் காவலர் குடியிருப்பில் வசிப்பவர் பொன்னு செல்வன் (35). இவர் தெற்குவாசல் சட்டம் ஒழுங்குப் பிரிவில் காவலராகப் பணியாற்றுகிறார். இவரது மனைவி குறிஞ்சிமலர். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்துவருகிறது.

இந்நிலையில் பொன்னு செல்வன், மார்ச் 6 அன்று காலை, தனது ஃபேஸ்புக்கில் கடிதம் ஒன்றை வெளியிட்டு விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது, “எனது சாவுக்கு மனைவியும், மாமியார் மீனாவும்தான் காரணம். என்னை மிரட்டி, என் அம்மாவிடம் செல்லக்கூடாது எனத் தடுக்கின்றனர். என் தங்கையிடம் பேசக்கூடாது என மிரட்டுகின்றனர்.

என் முழு சம்பளத்தையும் கேட்கின்றனர். தர மறுத்தால், என் சட்டையைக் கழற்றிவிடுவேன் என மிரட்டுகின்றனர். இவர்களை காவல் துறையினர் தண்டிக்க வேண்டும். என் மீது வீண் பழி சுமத்துகின்றனர்.

என்னால் நிம்மதியாக வேலை செய்ய முடியவில்லை. என் கடைசி ஆசையாக காவல் துறை உயர் அலுவலர்களையும், முதலமைச்சர் ஐயாவையும் கேட்டுக் கொள்கிறேன். என் போன்ற அடிமட்ட காவலர்கள், மிகவும் கஷ்டப்படுகின்றனர்.

அவர்களுக்கு, கேரளா போன்று சங்கம் தர வேண்டாம், ஆந்திரா போன்று சம்பளம் தர வேண்டாம். வாரம் ஒரு நாள் விடுமுறை அறிவியுங்கள். அதுவே, என் கடைசி ஆசை" எனக் கூறியுள்ளார்.

இதைப் பார்த்த சக காவலர்களும், நண்பர்களும் அதிர்ச்சியடைந்து, நேரில் சென்றபோது விஷம் குடித்திருந்தார். உடனடியாக அவரை, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவம் பெற்றுவருகிறார். இதற்கிடையே, அவரது ஃபேஸ்புக்கில் வெளியான கடிதம், காவல் துறை உயர் அலுவலர்களின் அறிவுரைப்படி நீக்கப்பட்டது.

இதையும் படிங்க:சத்தியமங்கலத்தில் ஓடும் காரில் தீ விபத்து: உயிர் தப்பிய பயணிகள்

ABOUT THE AUTHOR

...view details