செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் புழுதிவாக்கத்தைச் சேர்ந்தவர் வேலு. இவர் டாரஸ் லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார்.
இன்று (ஜன.30) அதிகாலை ஒரு மணியளவில், காஞ்சிபுரம் மாவட்டம் மதூர் பகுதியில் இருந்து ஜல்லிக் கற்களை ஏற்றிக்கொண்டு சென்று, மீனம்பாக்கத்தில் இறக்கியுள்ளார்.
பின்னர், மறைமலை நகர் டான்சி அருகே,அதிகாலை 4 மணியளவில் ஓய்வெடுக்க லாரியை நிறுத்தி உள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் அடங்கிய அடையாளம் தெரியாத கும்பல், வேலுவின் தலையில் கத்தியால் வெட்டி உள்ளனர்.
லாரி டிரைவரை தாக்கி வழிப்பறி தொடர்ந்து, அவரிடமிருந்த 3 ஆயிரம் ரொக்கப் பணம், அவருடைய செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.
இது குறித்து மறைமலை நகர் காவல் நிலையத்தில் லாரி உரிமையாளர் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர். இதுபோன்று ஓட்டுநர்களைத் தாக்கிக் கொள்ளை அடிக்கும் கும்பலை பிடிக்க காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்று, லாரி உரிமையாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:லொடுக்கு பாண்டி பாணியில் வீட்டில் திருட்டு - சிசிடிவி மூலம் போலீஸ் விசாரணை