தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

ரயிலில் சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்தவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது - railway police

ஓடும் ரயிலில் சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் கோவையை சேர்ந்த லாரி ஓட்டுநர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்தவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்தவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

By

Published : May 11, 2022, 10:55 PM IST

ஓடும் ரயிலில் சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் கோவையை சேர்ந்த லாரி ஓட்டுநர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது..ஈரோட்டில் ஓடும் ரயிலில் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட லாரி டிரைவர் போக்சோவில் கைது

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த 10 வயது சிறுமி, அவரது தந்தையுடன், கண்ணூர்-எஸ்வந்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தார். அதே ரயில் பெட்டியில் பயணித்த கோவை மாவட்டம் சேர்ந்த லாரி டிரைவரான கமலநாதன் என்பவரும் பயணித்தார்.

ரயில் ஈரோடு-சேலம் ரயில்வே ஸ்டேஷனுக்கும் இடைப்பட்ட பகுதியில் வந்து கொண்டிருந்தபோது கமலநாதன் சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி அவரது தந்தையிடம் கூற, அவர் சேலம் ரயில்வே போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.

ஓடும் ரயிலில் சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் கோவையை சேர்ந்த லாரி ஓட்டுநர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

இதையடுத்து சேலம் ரயில்வே போலீசார் கமலநாதனை பிடித்து, சம்பவ இடம் ஈரோடு எல்லைக்கு உட்பட்டது என்பதால் ஈரோடு ரயில்வே போலீசில் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து ஈரோடு ரயில்வே போலீசார் கமலநாதனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். ரயில் பயணம் மேற்கொள்பவர்கள் பாதுகாப்புக்காக 182 என்ற எண்ணில் ரயில்வே பாதுகாப்பு படையை தொடர்பு கொள்ளலாம்.

இதையும் படிங்க: ஈரோட்டில் தலைமை ஆசிரியர் வீட்டில் 65 சவரன் நகை கொள்ளை

ABOUT THE AUTHOR

...view details