தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

தடுப்புச் சுவரை உடைத்து பள்ளத்தில் விழுந்த லாரி

திம்பம் மலைப்பாதை 19 வளைவு அருகே சென்ற லாரி ஒன்று சாலையோர தடுப்புச் சுவரை உடைத்து பள்ளத்தில் விழுந்தது.

தடுப்பு சுவரை உடைத்து பள்ளத்தில் விழுந்த லாரி
Talavadi in Erode district

By

Published : Feb 7, 2022, 6:54 AM IST

ஈரோடு: தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதை வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. தமிழ்நாடு - கர்நாடக இடையே முக்கியப் போக்குவரத்தாக உள்ள இந்தப் பாதையில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரிலிருந்து கிரானைட் பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சங்கரிக்குச் சென்றது. இந்த லாரியை சாம்ராஜ்நகரைச் சேர்ந்த சனமுல்லா (26) ஓட்டினார். கிளீனராக இர்பான் (31) என்பவர் உடன் இருந்தார். லாரி திம்பம் மலைப்பாதை 19 வளைவு அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புச் சுவரை உடைத்து பள்ளத்தில் விழுந்தது.

இதில் ஓட்டுநர், கிளீனர் சிறு காயத்துடன் உயிர்தப்பினர். அவர்களை அவ்வழியாக வந்தவர்கள் மீட்டு சாம்ராஜ்நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். சாலையோரத்தில் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை. விபத்து குறித்து ஆசனூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: கல்லூரி மாணவர்களுக்கு போதை ஸ்டாம்புகள் சப்ளை செய்தநபர் கைது

ABOUT THE AUTHOR

...view details