கொல்லம் : கேரளத்தில் திருமணமான 24 வயது இளம்பெண் ஒருவர் கணவர் வீட்டின் குளியலறையில் தூக்கில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்திலுள்ள சாஸ்தம்கோட்டா பகுதியில் வசித்துவந்தவர் விஸ்மயா (24). இவரின் கணவர் கிரண் குமார். இவர்களுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை (ஜூன் 21) விஸ்மயா, கணவர் வீட்டில் உள்ள குளியலறையில் தூக்கில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
இது குறித்து பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது பெண்ணின் மரணத்துக்கு வரதட்சணை கொடுமையை காரணம் எனத் தெரியவந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும், அப்பெண்ணின் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா ஆறுதல் இந்நிலையில் வரதட்சணை தொடர்பாக 24 மணி நேர உதவி எண்ணை மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் அறிவித்தார். இதற்கிடையில் வழக்கை விசாரித்த விசாரணை அலுவலர் விஸ்மயா பெரும் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளார். அவரின் உடற்கூராய்விலும் அவரின் உடலில் காயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது. முன்னதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்கு நேரில் சென்று முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா ஆறுதல் கூறினார்.
இதையும் படிங்க: திமுக நிர்வாகி மீது வரதட்சணை புகார்