தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

50 சவரன் நகை திருட்டு: தீவிர விசாரணையில் காவலர்கள்! - சென்னை நகை திருட்டு

சென்னை பெரியமேடு அருகே 50 சவரன் நகை காணாமல் போனது தொடர்பாக நகைக்கடை உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, காவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

50 சவரன் நகை திருட்டு
50 சவரன் நகை திருட்டு

By

Published : Jan 18, 2022, 1:07 PM IST

Gold Theft: சென்னை வேப்பேரி பிரதாபட் சாலையில் உள்ள சந்தன்பாலா அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் மஹிபால்சந்த்(42). இவர் மும்பையிலிருந்து தங்க நகைகளை மொத்தமாக வாங்கி சென்னையிலுள்ள பல்வேறு நகைக் கடைகளுக்கு விற்பனை செய்யும் தொழில் செய்கிறார்.

இந்நிலையில் நேற்று (ஜன. 17) அதிகாலை மஹிபால்சந்த் ஒரு கிலோ எடையுள்ள தங்கத்தை 400 கிராம், 600 கிராம் என இரு பார்சல்களில் எடுத்துக்கொண்டு திருப்பதி செல்வதற்காக ஆட்டோவில் மத்திய ரயில் நிலையம் சென்றார்.

விசாரணை

அப்போது பெரியமேடு ஈவிஆர் சாலை எஸ்எல்ஓ அலுவலகம் அருகே ஆட்டோ சென்றபோது, மஹிபால் தான் வைத்திருந்த 400 கிராம் (50 சவரன்) நகை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனே அதே ஆட்டோவில் ஈவிகே சம்பத் சாலைவரை சென்று தேடி பார்த்தபோது நகை கிடைக்கவில்லை. இச்சம்பவம் குறித்து மஹிபால் பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காவலர்கள் விசாரணை நடத்தினர்.

மேலும் சம்பவ இடத்திலுள்ள சிசிடிவி காட்சிகளை காவலர்கள் ஆய்வு செய்தபோது நகை திருடு போனதற்கான எந்த காட்சிகளும் பதிவாகவில்லை.

இதனால் சந்தேகமடைந்த காவலர்கள் மஹிபால்சந்த்திடம் நகை உண்மையில் காணாமல் போனதா? அல்லது நகை திருடுபோனது போல் நாடகமாடுகின்றாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: 'ஊரடங்கில் ஜல்லிக்கட்டு: உதவி ஆய்வாளரை தாக்கிய 9 பேர் கைது!'

ABOUT THE AUTHOR

...view details