திண்டுக்கல்:திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது திருநகர். இங்கு தலைமைத் தபால் நிலைய உதவி அலுவலராக மணிமாறன் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
25 சவரன் நகைக் கொள்ளை:
இவருக்குச் சொந்தமான வீட்டில் பூட்டை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் 25 சவரன் நகையைக் கொள்ளையடித்து சென்றதுமட்டுமல்லாமல், கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் காவல் துறையினருக்குத் தெரியாமல் இருப்பதற்காக பீரோவில் இருந்த பத்திரங்கள், சான்றிதழ்கள், பட்டுப்புடவைகள், கணினி மற்றும் கைபேசி உள்ளிட்ட பொருட்களை இரண்டு படுக்கை அறைகளில் பரவலாக வைத்து தீ வைத்து கொளுத்திவிட்டுச் சென்றுள்ளனர்.
இதன் மதிப்பு 10 லட்ச ரூபாய் இருக்கலாமென மணிமாறன் தெரிவித்தார். மேலும், நள்ளிரவு நடந்த இந்தச் சம்பவம் அருகில் இருப்பவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்புத்துறையினர் மற்றும் நகர் வடக்கு காவல் நிலைய காவலர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
பின்னர் மணிமாறன் மற்றும் அவரது குடும்பத்தார் உள்ளே சென்று பார்த்தபோது பூட்டுகள் உடைக்கப்பட்டு கொள்ளைச் சம்பவம் நடைபெற்று இருப்பது தெரியவந்தது.