சென்னை:பெண் ஐபிஎஸ் அலுவலருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் நேரடியாகக் கண்காணிக்கும் என்று தெரிவித்துள்ளது.
விசாரணையின் முன்னேற்றம் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஐபிஎஸ் பெண் அலுவலர் ஒருவர் புகார் கொடுப்பதற்கு இவ்வளவு அலைக்கழிக்கப்பட்டிருக்கிறார் என்றால், சாதாரண பெண் காவலர்கள் நிலை என்ன என நீதிபதிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
பெண் ஐபிஎஸ் அலுவலர் பாலியல் விவகாரம்: நேர்மையான விசாரணை நடத்துமா விசாகா கமிட்டி?
இந்த விவகாரம் ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது, அதனால்தான் அரசியலமைப்புச் சட்டம் நீதிமன்றத்திற்கு வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
ஊடகங்கள் இதை விவாதப் பொருளாக்க வேண்டாம் என்றும், வழக்கு விசாரணையின்போது பெண் ஐபிஎஸ் அலுவலரின் பெயரைப் பயன்படுத்தவோ, விவாதம் செய்யவோ கூடாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.