திண்டுக்கல்: செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவர் திருமணம் செய்வதற்காக கௌரி திருமண மையத்தின் மூலம் பெண் தேடி உள்ளார். அப்பொழுது இடைத்தரகர்கள் மூலம் புதுச்சேரி நேரு தெருவை சேர்ந்த சோபிகா என்ற பெண்ணை பார்த்துள்ளார். பெண் பிடித்துப்போகவே திருமணம் செய்வதற்காக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
நிச்சயம் செய்த செல்லப்பாண்டி
அப்பொழுது தனக்கு தாய், தந்தை யாரும் இல்லை என்றும் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு சுனாமியில் இருவரும் இறந்து விட்டதாக பெண் சோபிகா கூறியுள்ளார். இதனை நம்பிய செல்லப்பாண்டி கடந்த மார்ச் 11ஆம் தேதி எளிமையான முறையில் புதுச்சேரியில் நிச்சயதார்த்தம் செய்துள்ளார். நிச்சயதார்த்தத்தின் போது ஒன்றரை பவுன் ஜெயின், பட்டுப்புடவை, 25,000 ரொக்க பணம் ஆகியவற்றை சோபிகாவிடம் கொடுத்துள்ளார்.
அதன்பின் சோபிகாவை புதுச்சேரியில் விட்டுவிட்டு செல்லப்பாண்டி திண்டுக்கல் வந்துள்ளார். பின்னர் ஐந்து மாதங்களாக எவ்விதமான தொடர்பும் இல்லாமல் இருந்துள்ளார் சோபிகா. இதனால் சந்தேகமடைந்த செல்லப்பாண்டி தனது உறவினரை அழைத்துக் கொண்டு புதுச்சேரியில் உள்ள சோபிகாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் வீடு வாடகைக்கு விடப்படும் என பலகை இருந்துள்ளது.