தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

வாடகை வீட்டில் தங்கி துப்பாக்கி தயாரிப்பு - தேசிய புலனாய்வு முகமை பிரிவு அதிகாரிகள் விசாரணை - செவ்வாய்பேட்டை

சேலத்தில் வாடகை வீட்டில் தங்கி துப்பாக்கி தயாரித்த இளைஞர்களை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்திருந்தனர். இந்நிலையில் இன்று இரண்டாவது முறையாக தடயவியல் பிரிவினருடன் என்ஐஏ அதிகாரிகள் அந்த வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.

சேலத்தில் மீண்டும் தேசிய புலனாய்வு முகமை பிரிவு அதிகாரிகள் விசாரணை
சேலத்தில் மீண்டும் தேசிய புலனாய்வு முகமை பிரிவு அதிகாரிகள் விசாரணை

By

Published : Oct 10, 2022, 6:46 PM IST

சேலம்: மாநகராட்சி பகுதியில் உள்ள செவ்வாய்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் பிரகாஷ். இவரும் சேலம் எருமாபாளையத்தைச் சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி என்பவரும் சேலம் அருகே உள்ள கோரிமேடு பகுதியில் இருக்கும் விநாயகம்பட்டி என்ற பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி துப்பாக்கி தயாரித்தனர்.

இதனையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் விநாயகம்பட்டியில் தங்கி இருந்த வீட்டிற்கு வந்து கடந்த வெள்ளிக்கிழமை என்ஐஏ அதிகாரிகள் 5 பேர் விசாரணை செய்திருந்தனர். அவர்கள் வீட்டில் இருந்த புத்தகங்கள் மற்றும் பல்வேறு பொருள்களை கைப்பற்றி எடுத்துச் சென்று இருந்தனர்.

இந்த நிலையில் தற்போது விநாயகம்பட்டிக்கு என்ஐஏ குழுவினர் 10 பேர் வந்து மீண்டும் விசாரணையில் ஈடுபட்டனர். இவர்களுடன் கைரேகை நிபுணர்கள் ஐந்து பேரும் வந்தனர். பின்னர் அனைவரும் இளைஞர்கள் தங்கியிருந்த வீட்டுக்குள் சென்று சோதனை செய்தனர்.

சேலத்தில் மீண்டும் தேசிய புலனாய்வு முகமை பிரிவு அதிகாரிகள் விசாரணை

அந்த வீட்டில் மண் பாக்கெட்டுகள் மற்றும் வயர்கள் இருந்துள்ளது. அதில் பதிந்திருந்த கைரேகைகளை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர். இது தவிர வீட்டில் இருந்த கம்பிகள், மின் பாக்ஸ் போன்ற பொருள்களையும் என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றனர். இந்த சோதனை சுமார் ஒரு மணி நேரம் நடந்தது.

இதையும் படிங்க:கள்ள நோட்டு மற்றும் கஞ்சா பொட்டலங்களுடன் சுற்றிய இருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details