தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

இன்டர்நேஷனல் ரெசிடென்சி பள்ளி தாளாளரிடம் விசாரணை - Tamil news

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்சி பள்ளி தாளாளர் சிவசங்கர் பாபாவிடம் வரும் ஜூன்11ஆம் தேதி விசாரணை நடத்தப்படவுள்ளது.

Case of sexual harassment
சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்சி பள்ளி

By

Published : Jun 3, 2021, 5:44 PM IST

சென்னை: சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்சி பள்ளி தாளாளர் சிவசங்கர் பாபாவிடம் வரும் ஜூன் 11ஆம் தேதி காலை 10 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சர்வதேச உண்டு உறைவிடப்பள்ளியான இந்தப் பள்ளியின் ஆசிரியர், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் தரப்பட்டதன் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கேகே நகர், பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் வெளியானதைத் தொடர்ந்து, பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் வரிசையாக சிக்கி வருகின்றனர். ஏற்கனவே நான்கு பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மேலும் மூன்று பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மாணவிகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக ஆணையத்திற்கு புகார் வந்தது.

அதன் அடிப்படையில், சென்னை அடையாறில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி, சென்னை கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்சி பள்ளி, நாமக்கல் மாவட்டத்தில் ஒரு தனியார் பள்ளி என மூன்று பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் கே.கே நகர் பத்ம சேஷாத்திரி சிபிஎஸ்இ பள்ளியின் நிர்வாகிகளிடம் நாளை (ஜூன்.04) விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து வரும் 7ஆம் தேதி செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி நிர்வாகத்திடமும், வரும் 8ஆம் தேதி செட்டிநாடு வித்யாஷ்ரமம் பள்ளியின் நிர்வாகத்திடமும், வரும் 10ஆம் தேதி மகரிஷி வித்யா மந்திர் பள்ளியின் தளாளரிடமும் விசாரணை மேற்கொள்ள சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

கேளம்பாக்கத்தில்சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்சி பள்ளி சிவசங்கர் பாபாவிடம் வரும் ஜூன் 11ஆம் தேதி காலை 10 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'தனியார் மருத்துவமனைகளுக்கும் ரெம்டிசிவர் மருந்து' - மருத்துவர் சங்கம் வரவேற்பு

ABOUT THE AUTHOR

...view details