கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி ஐந்தாவது மலையில் எலும்பு கூடாக அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக அவ்வழியாக சென்றவர்கள் ஆலாந்துறை காவல் நிலையத்திற்கு நேற்று (பிப்.12) தகவலளித்துள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் ஆண் சடலத்தை சோதனை செய்தபோது, ஒரு அடையாள அட்டை கிடைத்துள்ளது. அதில் தமிழரசு ஓமலூர், சேலம் என்ற முகவரி இருந்துள்ளது. இதனையடுத்து, ஆலாந்துறை காவல் துறையினர் சேலம் மாவட்டம் ஓமலூர் காவல் துறையினரை தொடர்பு கொண்டபோது, கடந்த ஜூன் மாதம் தமிழரசின் தாயார் தன்னுடைய மகனை காணவில்லை என்று புகார் அளித்திருந்தது தெரியவந்தது.