தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்...

சட்டவிரோதமாக உரிமம் இல்லாமல் பதுக்கி வைத்திருந்த 45,360 வலி நிவாரண மாத்திரைகளை சத்தியமங்கலம் காவல்துறையினர் பறிமுதல் செய்து, மருத்து கட்டுப்பாடு அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.

pain reliever pills  Illegally hoarded pain reliever pills  pain reliever pills seized in sathyamangalam  வலி நிவாரண மாத்திரைகள்  வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்  சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த வலி நிவாரண மாத்திரைகள்  சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்  மருத்து கட்டுப்பாடு அலுவலர்  சத்தியமங்கலம் காவல்துறை  போதை மாத்திரைகள் ஒழிப்பு நடவடிக்கை  வலி நிவாரணம் நோவாபென்  விக்ஸ் ஆக்சன் 500
வலி நிவாரண மாத்திரைகள்

By

Published : Aug 20, 2022, 11:41 AM IST

ஈரோடு: தமிழ்நாடு முழுவதும், தற்போது போதை மாத்திரைகள் ஒழிப்பு நடவடிக்கையில் காவல் துறையினர் இறங்கியுள்ளது. அந்தன் ஒரு பகுதியாக சத்தியமங்கலம் பகுதியில் மருத்துவ பயன்பாடின்றி போதைக்கு பயன்படுத்தும் மத்திரைகளை அனுமதியில்லாமல் பதுக்கி வைத்திருக்கும் கடைகளை சோதனையிட்டனர்.

அந்த வகையில், சத்தியமங்கலம் திப்புசுல்தான் சாலையில் உள்ள ராஜஸ்தானைச் சேர்ந்த வியாபாரி சோனாராம் பலசரக்கு கடையில் காவல்துறையினர் சோதனையிட்டனர். அதில் உரிமம் இல்லாமல் குடோனில் பதுக்கி வைத்திருந்த வலி நிவாரணம் நோவாபென், சாரிடன், விக்ஸ் ஆக்சன் 500, கூல்டு கி என 45 ஆயிரத்து 360 மத்திரைகள் பறிமுதல் செய்தனர்.

இந்த மாத்திரைகளை மருத்து கட்டுப்பாடு ஆய்வாளர் நந்தகுமாரிடம் ஒப்படைத்தனர். அதைத்தொடர்ந்து உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக வலி நிவாரணம் மாத்திரைகள் விற்றதாக சோனாராம் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: விமானத்தில் புகைபிடித்த பயணி போலீசில் ஒப்படைப்பு

ABOUT THE AUTHOR

...view details