தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை - ஒருவர் கைது! - thoothukudi crime news

உடன்குடியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரை கைதுசெய்த காவல் துறையினர், அவரிடமிருந்து 1.1கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

cannabis seller arrested in thoothukudi
cannabis seller arrested in thoothukudi

By

Published : Jan 28, 2021, 6:39 AM IST

தூத்துக்குடி: சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை காவல் துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் காவல் ஆய்வாளர் ராதிகா தலைமையிலான காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உடன்குடி, தேரியூர் பகுதியில், புதுமனை கோட்டைவிளை பகுதியைச் சேர்ந்த அமீர் (24) என்பவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, காவல் துறையினர் அவரை கைதுசெய்து, விற்பனைக்கு வைத்திருந்த 1.1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details