ஹைதராபாத்: தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் மே 28ஆம் தேதி 17 வயதான சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். அந்தச் சிறுமியை பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட ஒருவர் காதலித்துள்ளார்.
இருவரும் பிறந்தநாள் பார்ட்டி கொண்டாட பப் சென்ற இடத்தில், காதலித்த சிறுமியை நண்பர்களுக்கு விருந்தாக்கியுள்ளான் அந்தக் கொடூர மனம் படைத்த காதலன். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த விவகாரம் மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் வழக்கில் இதுவரை 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் மேஜர் என்பதும் மற்றொருவர் 18 வயதை கடக்க ஒரு மாதமே மீதமிருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்தத் தகவலை செவ்வாய்க்கிழமை (ஜூன்7) இரவு செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் சிவி ஆனந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் பாலியல் காணொலியில் உள்ள சிறுவன், பாலியல் வன்புணர்வு குற்றத்தில் ஈடுபடவில்லை எனவும் அவர் கூறினார். எனினும் சம்பந்தப்பட்ட சிறுவன், சிறுமியிடம் மோசமாக நடந்துள்ளார் என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: ஹைதராபாத் சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமை முன்கூட்டியே திட்டமிடப்பட்டது: விசாரணையில் பகீர் தகவல்!