தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

மனைவி பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்காததால் கணவன் தூக்கிட்டுத் தற்கொலை - கணவன் தூக்கிட்டு தற்கொலை

பல்லாவரத்தில் மனைவி பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்காத விரக்தியில் கணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

மனைவி பிறந்தநாள்  வாழ்த்து தெரிவிக்காததால் கணவன் தூக்கிட்டு தற்கொலை
மனைவி பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்காததால் கணவன் தூக்கிட்டு தற்கொலை

By

Published : Oct 3, 2022, 10:43 PM IST

சென்னை: பல்லாவரம் அடுத்த பெருமாள் நகர் 2ஆவது பிரதான சாலையில் வசிப்பவர், ஜெய்கிருஷ்ணன்(30). இவரது மனைவி இந்துமதி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் ஜெய்கிருஷ்ணா பிறந்தநாளன்று மனைவி இந்துமதி, தனது தாயார் வீட்டில் இருந்துள்ளார். அப்போது ஜெய்கணேஷ் தனது மனைவியிடம், தனக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறவில்லை, வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார்.

ஆனால், மனைவி இந்துமதி வர மறுக்கவே, மன உளைச்சலில் இருந்த ஜெய்கிருஷ்ணா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த பல்லாவரம் காவல்துறையினர் விரைந்து சென்று பிரேதத்தைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக குரோம்பேட்டை அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை தீர்வல்ல

மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:மருத்துவமனையில் நர்ஸுக்கு கத்திக்குத்து; கணவர் வெறிச்செயல்

ABOUT THE AUTHOR

...view details