தர்மபுரி:உண்ட உணவுக்கு பணம் செலுத்தும்படிக் கோரிய உணவக ஊழியர்களைத் தாக்கிய நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் அரூர் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் திருமண மண்டபம் எதிரில் செல்லம் பட்டியைச் சேர்ந்த சேகர், நியூ பஞ்சாபி தாபா என்ற பெயரில் உணவகம் நடத்திவருகிறார். நேற்று (மார்ச் 16) மாலை சுமார் 5 மணியளவில் அரூர் பழைய பேட்டையைச் சேர்ந்த இரண்டு நபர்கள் அவர்களுக்குத் தேவையான உணவுகளை வழங்குமாறு ஊழியர்களிடம் கேட்டுள்ளனர்.
அவர்கள் கேட்ட அனைத்து உணவுகளையும் வழங்கிய பிறகு, உணவுக்கான தொகை ரூ. 500 கொடுங்கள் என்று ஊழியர் கேட்டபோது, “நான் யார் என்று உங்களுக்கு தெரியுமா, என்னிடமே பணம் கேட்கிறீர்களா?” என்று ஊழியர்களை மிரட்டும் தொனியிலும் தகாத வார்த்தையாலும் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.