மயிலாடுதுறை:மஞ்சவாய்க்கால் அருகே ரயில் தண்டவாளத்தில் கடந்த மாதம் 30 ஆம் தேதி கொலை செய்யப்பட்ட இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து மயிலாடுதுறை தனிப்படை போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த வாலிபர் மறையூறைச் சேர்ந்த ராஜ்குமார்(20) என்பதும், கட்டிட சித்தாள் வேலைக்கு சென்று வருவதும் தெரிந்தது.
அவரை சித்தர்காடு தெற்கு தெருவை சேர்ந்த குருமூர்த்தி மகன் கபிலன் என்பவரும் பள்ளி மாணவர் ஒருவரும் முதல் நாள் இரவு இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. கொலை சம்பந்தமாக கபிலன் மற்றும் பள்ளி மாணவனை கைது செய்த தனிப்படை போலீசார் ரயில்வே காவல்துறை வசம் ஒப்படைத்தனர்.
கொலைக்கான காரணம் குறித்து ரயில்வே தனிப்படை போலீசார் கொலையாளிகளை விசாரித்த போது, அவர்கள் வெளியிட்ட தகவல்கள் அதிர்ச்சி தருவதாக இருந்தது. கபிலன் மற்றும் பள்ளி மாணவன் இருவரும் இணைந்து ரயில்வே லைன் பகுதியில் ராஜ்குமாருக்கு அளவுக்கு அதிகமாக மதுவை ஊற்றி கொடுத்துள்ளனர். தொடர்ந்து அவரை தன்பாலின சேர்க்கைக்கு அழைத்துள்ளனர்.
அதற்கு மறுத்துவிட்டு ராஜ்குமார் தப்பி ஓடிய போது பீர் பாட்டிலால் மண்டையில் தாக்கியுள்ளனர். பின் காயம் அடைந்து கீழே விழுந்தவரை கற்களால் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளனர். கொலையை மறைக்க ராஜ்குமார் உடலை தண்டவாளத்தின் நடுவே போட்டுள்ளனர். மெலிதான உருவம் என்பதால் தண்டவாளத்தில் நடுவே கிடந்த உடல் ரயில்களில் அடிபட்டு சிதையாமல் கிடந்துள்ளது. இதனால் கொலையை தற்கொலையாக்க முயற்சித்த நாடகம் அரங்கேறாமல் கொலையாளிகள் பிடிபட்டுள்ளனர்.
இதையும் படிங்க:ஒரே வீட்டில் 3 பேர் படுகொலை; டெல்லியில் கொடூரம்...!