தேனி:அருகே உள்ள வடபுதுப்பட்டியில் சாலையின் நடுவே தனது காரை அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் நிறுத்தியுள்ளார். இதனால் அந்தப் பாதையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், அந்தப் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் காரை ஓரமாக நிறுத்த சொல்ல அதற்கு காரில் வந்த நபர் மறுக்கவே, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, காரில் இருந்த பெண் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள் கார் உரிமையாளரிடம் சண்டை போடவே அவர்களையும் தகாத வார்த்தையில் திட்டியுள்ளார். இதனையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து காவல்துறையினர் விரைந்து வந்து காரின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யாமல் அங்கிருந்து அப்புறப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.