தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

சென்னையில் ரூ.1.85 கோடி ஹவாலா பணம் பறிமுதல் - பூக்கடை பகுதியில்

சென்னையில் வாகன சோதனையின் போது ரூ.1.85 கோடி ஹவாலா பணத்தை பறிமுதல் செய்த போலீசார், அந்த பணத்தையும், இரண்டு இளைஞர்களையும் வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர்.

சென்னையில் 1 கோடி ரூபாய் ஹவாலா பறிமுதல்; வருமானவரித்துறையிடம் ஒப்படைப்பு
சென்னையில் 1 கோடி ரூபாய் ஹவாலா பறிமுதல்; வருமானவரித்துறையிடம் ஒப்படைப்பு

By

Published : Sep 1, 2022, 9:28 AM IST

சென்னை: பூக்கடை பகுதி தேவராஜ் முதலி தெருவில் பூக்கடை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவர்கள் கொண்டு வந்த பையை சோதனை செய்தனர். அதில் கட்டுக்கட்டாக 1 கோடியே 85 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது.

அந்த பணத்திற்குண்டான ஆவணங்கள் அவர்களிடம் இல்லாததால் போலீசார் பணத்தை பறிமுதல் செய்து இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் செங்குன்றம் பகுதியை சேர்ந்த ஷேக் தாவூத் (52) மற்றும் மண்ணடியை சேர்ந்த அம்ஜித் கான் (26) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

இவர்கள் பர்மா பஜாரில் சுல்தான் என்பவரிடம் வேலை செய்து வருவதாகவும், சுல்தான் அளித்த பணத்தை கொண்டு சென்றதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து போலீசார் 1 கோடியே 85 ஆயிரம் ரூபாய் ஹவாலா பணம் மற்றும் இருவரையும் வருமான வரித்துறையினரிடத்தில் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க:காவல்நிலையம் சென்றுவர வசதியாக இருக்குமென்றே பைக்கை திருடினேன்... குற்றவாளியின் பகீர் வாக்குமூலம்...

ABOUT THE AUTHOR

...view details