தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

122 கிலோ குட்கா, புகையிலை பொருள்கள் கடத்தல் - இருவர் கைது, முதலாளி தலைமறைவு - Chennai Crime News

மீனம்பாக்கம் அருகே போலீசார் வாகன பரிசோதனையின்போது 122 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருள்களை காவல் துறையினர் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர். கைதுசெய்யப்பட்ட இருவரின் முதலாளி தற்போது தலைமறைவாக உள்ள நிலையில், அவரை காவல் துறை தேடி வருகிறது.

மீனம்பாக்கம் அருகே காரில் கடத்திய வந்த 122 கிலோ குட்கா மற்றும் புகையிலை போலிசாரிடம் சிக்கியது.
மீனம்பாக்கம் அருகே காரில் கடத்திய வந்த 122 கிலோ குட்கா மற்றும் புகையிலை போலிசாரிடம் சிக்கியது.

By

Published : Apr 8, 2022, 8:32 AM IST

சென்னை: மீனம்பாக்கம் அடுத்த பழவந்தாங்கல் சப்வே அருகில் பழவந்தாங்கல் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த டொயோட்டோ காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் மூட்டை மூட்டையாக குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

சுமார் 122 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருள்களை காவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர், இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர்கள் தரமணி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (34), அடியாறு பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாசன் (45) என தெரியவந்தது.

5 மாதங்களாக விற்பனை: மேலும், அவர்கள் பெங்களூரு மார்க்கெட் பகுதியில் இருந்து மூட்டை மூட்டையாக குட்கா மற்றும் புகையிலை பொருள்களை காரில் சென்னைக்கு கடத்தி வந்து அவர்களின் முதலாளி ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்த மகேஷ் என்பவர் தெரிவிக்கும் கடைகளில் கடந்த 5 மாதங்களாக விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, இருவர் மீதும் மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து புகையிலை பொருள்களை கடத்தி வந்த காரை பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மகேஷ் என்பவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 491 டன் குட்கா, பான்பராக் பறிமுதல் - மா சுப்பிரமணியன்

ABOUT THE AUTHOR

...view details