கடலூர் :நெல்லிக்குப்பம் காந்தி வீதியைச் சேர்ந்தவர் பாண்டியன். கட்டிட தொழிலாளியான இவருடைய மனைவி விஜயஸ்ரீ(30) .மர்ம நபர் ஒருவர் பாண்டியன் வீட்டிற்கு சென்றுள்ளார்.
திட்டம் தீட்டி நாடகம்
பின்னர் பாண்டியன் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர் அவரது மனைவி விஜயஸ்ரீ அழைத்து உள்ளார். அப்போது இரவு நேரத்தில் காத்து கறுப்பு தாக்கியது போல் நீங்கள் பயந்து அலறியதாக உங்கள் கணவர் பாண்டியன் என்னிடம் கூறினார். ஆகையால் நான் நேரில் வந்து காத்து கருப்பு விரட்டி சரி செய்கிறேன் என கூறியுள்ளார். அப்போது விஜயஸ்ரீ இது சம்பந்தமாக என் கணவர் என்னிடம் எதுவும் சொல்லவில்லை,ஆகையால் நீங்கள் செல்லுங்கள் என கூறியுள்ளார்.
ஆனால் அந்த நபர் உங்கள் கணவர் பாண்டியன் என்னிடம் தெரிவித்து விட்டு தற்போது தான் வெளியில் சென்றுள்ளார் என கூறியதுடன் குடிக்கத் தண்ணீர் கேட்டதைத் தொடர்ந்து அவர் வீட்டினுள் சென்று தண்ணீர் எடுத்து வந்துள்ளார். பின்னர் விஜயஶ்ரீயை அமர வைத்து. அவரது முகத்தில் தண்ணீரை அடித்து தலையைச் சுற்றி மூன்று முறை தண்ணீரை கீழே ஊற்றி உள்ளார்,பிறகு நகையை சொம்பில் போட சொல்லி உள்ளார்.
காத்து, கருப்பை ஓட்டுவதாகக் கூறி வீட்டில் இருந்த பெண்ணிடம் 6 பவுன் நகை கொள்ளை பட்டப்பகலில் 6 பவுன் நகை கொள்ளை
அதற்கு அவர் மறுக்கவே இதை போட்டால்தான் தோஷம் கழியும் என அவர் கூறியுள்ளார் அந்த ஆசாமி. ஆனால் விஜயஸ்ரீ சந்தேகத்துடன் கழுத்தில் இருந்த 6 பவுன் தாலி செயினை கழற்றி சொம்பில் உள்ள தண்ணீரில் போட்டு உள்ளார். பின்னர் காதில் உள்ள கம்மலையும் கழற்றி போட சொல்லிய பின்னர் சுபஸ்ரீ முகத்தில் அந்த தண்ணீரை மர்ம நபர் மீண்டும் தெளித்துள்ளார்.
பின்னர் உள்ளே சென்று முகத்தை கழுவி விட்டு வெளியில் வருமாறு தெரிவித்து உள்ளார். இதனைத்தொடர்ந்து விஜயஸ்ரீ வீட்டுக்குள் சென்று முகத்தைக் கழுவி விட்டு வெளியில் வந்து பார்த்த போது மர்ம நபரை சொம்புடன் காணவில்லை. இதனால் பதற்றமடைந்த விஜயஸ்ரீ அப்பகுதி முழுவதும் தேடி உள்ளார் இதைத்தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டு உள்ளதை அறிந்த விஜயஸ்ரீ தன் கணவருக்கு தகவல் கொடுத்தார் . இதுகுறித்து நெல்லிக்குப்பம் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்மநபரைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:காதல் ஜோடி மாயம்: மின்கம்பத்தில் கட்டி வைத்து காதலனின் தாயார் மீது தாக்குதல்!