தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு கொடுத்த முதியவர் கைது! - குற்றச் செய்திகள்

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் 68 வயது முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

harassment case
சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு கொடுத்த முதியவர்

By

Published : Mar 5, 2021, 11:53 AM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவிற்கு உள்பட்டது மம்சாபுரம். இந்தப் பகுதியில் வசிக்கும் பரமன் (68) என்ற முதியவர், கடந்த 2018 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியிடம் தவறாக நடந்திருக்கிறார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து காவலர்கள், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இவ்வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று (மார்ச்5) முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 25 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி பரிமளா தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார். முதியவர் பரமனை காவல் துறையினர் மதுரை சிறைச்சாலையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: அரசுப் பேருந்தில் கஞ்சா கடத்தியவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details