திருமயம் அருகே கண்ணனிப்பட்டியில் உள்ள ஒரு கல் குவாரியில், பாறைகளை தகர்க்க பயன்படுத்தும் வெடிப்பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது. அதையடுத்து திருமயம் காவல் மற்றும் வருவாய்துறையினர் அப்பகுதிக்கு சென்று கல்குவாரி அருகே உள்ள குடோனில் ஆய்வு செய்தனர்.
அதில் பாறைகளை தகர்க்க வைக்கும் வெடிப்பொருள்களான 1,800 ஜெலட்டின் குச்சிகளும், 600 டெட்டனேட்டர் இணைப்புகளும் இருந்தன. அனுமதியின்றியும், உரிய பாதுகாப்பு இல்லாமலும் வைக்கப்பட்டிருந்த வெடிப்பொருட்கள் அனைத்தையும் பறிமுதல் செய்த காவல்துறையினர், குடோன் நிர்வாகி அந்தோணி முத்து(47) என்பவரை கைது செய்தனர். பின்னர் வருவாய்துறையினர் குடோனை பூட்டி சீல் வைத்தனர்.