சென்னை: விருகம்பாக்கம் இளங்கோ நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த முத்துக்குமரன் சைதாப்பேட்டையில் தொலைதூர கல்வி நிலையத்தை வைத்து நடத்திவருகிறார்.
இவருக்கு அறிமுகமான கார்த்திக் பிரசன்னா என்பவர், தான் அசாம் மாநில அமைச்சரான ராஜன் கொஹைனின் மருமகன் என தெரிவித்துள்ளார். மேலும், அமைச்சருடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், இந்திய விமான படையில் பைலட் எஸ்கார்ட் ஆபிசராக இருப்பதாக அடையாள அட்டை காண்பித்துள்ளார்.
வேலை வாங்கித் தருவதாக மோசடி
தொடர்ந்து, ரயில்வே துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு ஆட்கள் தேவைப்படுவதாகவும், தலா ஒருவருக்கு 3.5 லட்ச ரூபாய் கொடுத்தால் வேலை வாங்கி தருவதாகவும், தனக்கு தரகுத் தொகையாக 25 ஆயிரம் ரூபாயும், ஏஜெண்டாக வேலை பெற்று தருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பி கடந்த 2018ஆம் ஆண்டு பொதுமக்களிடம் பெற்ற 1.25 கோடி ரூபாய் பணத்தை கார்த்திக் பிரசன்னாவின் மனைவியான ஜூரி ராணி தேவியின் வங்கி கணக்கிற்கு முத்துக்குமரன் அனுப்பியுள்ளார்.
Also read:ஏமன் பயணிக்கவிருந்த வேலூர் பயணி சென்னை விமான நிலையத்தில் கைது!
ஆனால் நீண்ட மாதமாக பணி வாங்கி தராததால், சந்தேகமடைந்த முத்துக்குமரன் ரயில்வேயில் சென்று விசாரித்த போது, கார்த்திக் பிரசன்னா அசாம் அமைச்சரின் மருமகன் எனக்கூறியது பொய் என்றும், இதேபோல் பல பேரிடம் வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.