தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

மக்களே உஷார்... வீட்டு வேலை செய்து வரும் பெண்ணிடம் லோன் தருவதாகக்கூறி நூதன முறையில் மோசடி

கடலூர் அருகே வீட்டு வேலை பார்த்துவரும் பெண்ணுக்கு லோன் தருவதாகக்கூறி, அடிக்கடி கட்டணம் என்ற பெயரில் 90 ஆயிரம் ரூபாய் மோசடி செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வீட்டு வேலை செய்து வரும் பெண்ணிடம் லோன் தருவதாக கூறி நூதன முறையில் மோசடி
வீட்டு வேலை செய்து வரும் பெண்ணிடம் லோன் தருவதாக கூறி நூதன முறையில் மோசடி

By

Published : Aug 29, 2022, 3:16 PM IST

சென்னை:கடலூர் மாவட்டம் கொண்டசமுத்திரம் பகுதியைச்சேர்ந்தவர்கள் அருமைநாதன், அடைக்கலமேரி தம்பதியினர். இவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உள்ளன. அருமைநாதன் கூலி வேலை செய்தும், அடைக்கலமேரி வீட்டு வேலை செய்தும் வருகின்றனர்.

இந்த இந்நிலையில் அடைக்கல மேரியின் தொலைபேசிக்கு அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து போன் வந்துள்ளது. அதை எடுத்துப்பேசியபோது ஸ்ரீ கிருஷ்ணா பைனான்ஸில் இருந்து நந்தினி பேசுவதாகவும், உங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் லோன் தருவதாகவும் கூறி அதற்கு மாதம் 2,800 ரூபாய் வீதம் 5 ஆண்டுகளுக்குக் கட்ட வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

அதற்கு இன்ஸ்யூரன்ஸ் தொகையாக 3,500 ரூபாயை கூகுள் பே மூலம் அனுப்பச்சொல்லி உள்ளனர். இதனால் அடைக்கலமேரி கூகுள் பே மூலம் ரூபாய் 3,500 அனுப்பி உள்ளார். மேலும் 24 ஆயிரம் ரூபாய் தொகையை நீங்கள் கட்டினால், உடனடியாக உங்களுக்கு லோன் கொடுக்கப்படும் என்றும்; அத்துடன் சேர்த்து இந்த 24 ஆயிரம் ரூபாயையும் கொடுத்து விடுவோம் எனவும் கூறியுள்ளனர்.

இதனால் அடைக்கலமேரி 24 ஆயிரம் ரூபாயை கடன் வாங்கி கூகுள் பே மூலம் அனுப்பி உள்ளார். பின்பு ஒரு வாரம் கழித்து மேலும் 35 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து தெரிவித்துள்ளனர். அதற்கு தனக்கு லோன் வேண்டாம்; தான் கட்டிய பணத்தை திருப்பிக்கொடுத்துவிடுங்கள் எனக் கூறியுள்ளார்.

ஆனால், பைனான்ஸ் நிறுவனத்தில், நீங்கள் 35 ஆயிரம் ரூபாய் கட்டினால் உடனடியாக உங்களுக்கு லோன் பணமும் நீங்கள் கட்டிய பணமும் திருப்பி அனுப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். இதனால் அடைக்கலமேரி 32 ஆயிரம் ரூபாயை கூகுள் பே மூலம் மீண்டும் அனுப்பி உள்ளார்.

இந்த நிலையில் ஒரு வாரத்திற்குப்பிறகு, மீண்டும் பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து மீண்டும் 25 ஆயிரம் ரூபாய் நீங்கள் கட்ட வேண்டும் எனக்கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அடைக்கலமேரி, 'எனக்கு லோன் வேண்டாம். நான் கட்டிய பணத்தை திருப்பி கொடுத்துவிடுங்கள்' எனக் கேட்டுள்ளார். அதற்கு பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து 48 நாட்கள் ஆகும் எனக்கூறி போனை துண்டித்துள்ளனர்.

பின்பு ஒரு வார காலம் கழித்து, மீண்டும் பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து தொடர்புகொண்டு, 'நீங்கள் 25 ஆயிரம் ரூபாய் கட்டினால் நீங்கள் கட்டிய பணத்தோடு லோன் பணமும் சேர்த்து ஒன்றாக கொடுத்துவிடுகிறோம்' எனக் கூறியுள்ளனர். இதனை நம்பி அடைக்கலமேரி மீண்டும் 25 ஆயிரம் ரூபாய் கட்டி உள்ளார். பிறகு மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் 50 ஆயிரம் ரூபாய் கட்டினால், இரண்டு லட்சத்திற்கான செக்கை அனுப்புவதாக கூறி உள்ளனர்.

தான் ஏமாற்றப்படுவதை அறிந்த அடைக்கலமேரி, தனக்கு லோன் வேண்டாம் எனவும்; தான் கட்டிய 90 ஆயிரம் ரூபாய் பணத்தை திருப்பிக்கொடுக்கும் படியும் கூறியுள்ளார். பின்னர் அடைக்கல மேரி பலமுறை தனியார் பைனான்ஸ் நிறுவனத்திற்குத் தொடர்பு கொண்டும் போன் எடுக்கவில்லை.

இதனால் விரக்தி அடைந்த அடைக்கலம் மேரி தன்னிடமிருந்து நூதன முறையில் ஏமாற்றிய 90 ஆயிரம் ரூபாய் பணத்தை மீட்டுத்தரும்படி சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து பேசிய செல்போன் எண்களை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:முதியவர்களை குறிவைத்து ஏடிஎம் கார்டு மூலம் பணம் திருட்டு... வட மாநிலத்தைச் சேர்ந்த மூவர் கைது...

ABOUT THE AUTHOR

...view details