திண்டிவனம் அடகல் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர்(47). இவர் கடந்த 16ஆம் தேதி, தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் போக்சோவில் கைது! - சிறுமிக்கு பாலியல் தொந்தரவு
விழுப்புரம்: திண்டிவனம் அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை, போக்சோ சட்டத்தின் கீழ், காவல் துறையினர் கைது செய்தனர்.
![4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் போக்சோவில் கைது! 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10753299-thumbnail-3x2-childabuse.jpg)
4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு
இதுகுறித்து சிறுமியின் தாய், திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன அடிப்படையில் சேகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை!