தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

மணிகண்டன் பாலியல் வழக்கு: உதவியாளர், பாதுகாவலரிடம் விசாரணை நடத்தும் போலீஸ்! - crime news tamil

முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை பாலியல் புகார் அளித்த வழக்கில் அவரின் உதவியாளர், பாதுகாப்பு காவலர் ஆகியோர் விசாரணைக்கு இன்று ஆஜராகியுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பாலியல் வழக்கு, அமைச்சர் மணிகண்டன் பாலியல் வழக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன், நடிகை குற்றச்சாட்டு, நடிகை சாந்தினி, நாடோடிகள் சாந்தினி, முக்கிய செய்திகள், சென்னை செய்திகள், குற்ற செய்திகள், crime news tamil, latest crime news tamil
மணிகண்டன் பாலியல் வழக்கு

By

Published : Jun 9, 2021, 3:48 PM IST

சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சரான மணிகண்டன் மீது நடிகை ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக கூறி மூன்று முறை கருக்கலைப்பு செய்து ஏமாற்றிவிட்டதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் மே மாதம் 28ஆம் தேதி புகாரளித்தார்.

இது தொடர்பாக மணிகண்டன் மீது கட்டாய கருக்கலைப்பு, கொலை மிரட்டல், பாலியல் வன்கொடுமை உட்பட 6 பிரிவுளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இச்சூழலில், அவர் அமைச்சராக இருந்த காலத்தில் அவரிடம் பணி புரிந்த அரசு கார் ஓட்டுநர், பாதுகாவலர், அரசு உதவியாளர் ஆகியோர் நேற்று (ஜூன் 8) நேரில் விசாரணைக்கு ஆஜராக அடையாறு காவல் துறையினர் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் நேற்று அவர்கள் ஆஜராகவில்லை.

இந்நிலையில், இன்று காலை 9 மணியளவில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் அரசு பாதுகாப்பு அலுவலர் கெளரீஸ்வரன், உதவியாளர் சரவண பாண்டி ஆகியோர் அடையாறு காவல் நிலையத்தில் ஆஜராகினர்.

அவர்களிடம், நடிகையுடன் மணிகண்டனுக்கு தொடர்பு உள்ளதா? கட்டாய கருக்கலைப்பு செய்ததது உண்மையா? நடிகையை காரில் அழைத்து சென்றது உண்மையா? என்ற ரீதியில் 2 மணி நேரத்துக்கும் மேலாக காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், இந்த வழக்கிற்கு தேவையான சில முக்கிய தகவல்கள் பெறப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, மணிகண்டனை பிடிக்க அடையாறு தனிப்படை காவல் துறையினர் ராமநாதபுரத்திற்கு விரைந்த போது அவர் தலைமறைவானார். தொடர்ந்து முன் பிணை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி ஜூன் 9ஆம் தேதி (இன்று) வரை மணிகண்டனை கைது செய்யக்கூடாது என காவல் துறைக்கு உத்தரவிட்டது.

விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடை விதிக்காத நிலையில், காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் அமைச்சர் என்பதால் போதுமான ஆதாரங்களை திரட்டும் பணியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details