தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட மீனவர் அடித்து கொலை- நண்பர் கைது! - சென்னையில் மீனவர் கொலை

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் மீனவரை அடித்து கொலை செய்த அவரது நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Kasimedu
Kasimedu

By

Published : Sep 5, 2021, 7:25 AM IST

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (42). இவர் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் கூடைத்தூக்கும் கூலி வேலைகளைச் செய்து வந்தார்.

ஆகஸ்ட் 29ஆம் தேதி கமலக்கண்ணனுக்கும், அவருடன் பணியாற்றும் நண்பர் ஒருவருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியிருக்கிறது. அப்போது அந்த நண்பர் அருகிலிருந்த கல்லை எடுத்து கமலக்கண்ணன் தலையில் பலமாக தாக்கி விட்டு தப்பி சென்றுவிட்டார். இந்த தாக்குதலால் ரத்த வெள்ளத்தில் மிதந்த கமலக்கண்ணனை அருகில் இருந்த மீனவர்கள் மீட்டு அரசு ஸ்டான்லி பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கமலக்கண்ணன் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர், ஆய்வாளர் இசக்கி பாண்டியன் தலைமையில் தனிப்படை அமைத்து கமலக்கண்ணனின் நண்பரை தேடி வந்தனர். இந்நிலையில், கமலக்கண்ணனை தாக்கி கொலை செய்ததாக அவருடைய நண்பரான இளையராஜா (35) என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பணத் தகராறில் இருவருக்கு ஏற்பட்ட சண்டையில் இளையராஜா அருகே இருந்த கல்லை எடுத்து கமலக்கண்ணன் தலையில் தாக்கிவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து இளையராஜா மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details