தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

ஏர்வாடி அருகே மீனவர் அடித்துக் கொலை - ஒருவர் கைது - மீனவர் அடித்துக் கொலை

ராமநாதபுரம்: அன்னதான பொட்டலங்கள் வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் மீனவர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஏர்வாடியில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

fisherman killed near dargah
ervadi dargah

By

Published : Aug 31, 2021, 12:16 AM IST

ராமநாதபுரம் மாவட்டம் மாரியூரை சேர்ந்தவர் சண்முகராஜ் (55). இவர் ஏர்வாடி அருகே முத்தரையர் நகரில் கடந்த 40 ஆண்டுகளாக தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மனைவிகள் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இதையடுத்து ஏர்வாடி தர்காவில் அன்னதான பொட்டலங்கள் வழங்கும் போது சண்முகராஜுக்கும் தர்காவில் தங்கி உள்ள மதுரையை சேர்ந்த அஜித் குமார் என்கிற சாகுல் ஹமீது என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் சாகுல் ஹமீது சண்முகராஜின் வயிற்றின் மீது ஏறி மிதித்தாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்துக்குப் பின்னர் இரவு வழக்கம்போல் சண்முகராஜ் ஏர்வாடி தர்கா அருகே தூங்கியுள்ளார். காலையில் அவர் விழக்காத நிலையில், அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது சண்முகராஜ் இறந்து இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து ஏர்வாடி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், கீழக்கரை டி.எஸ்.பி. சுபாஷ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.

இதையடுத்து இறந்த சண்முகராஜ் உடலை கைப்பற்றி உடற் கூராய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இவருடன் சண்டையிட்ட சாகுல் ஹமீது என்பவரை ஏர்வாடி காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details