தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

ஜெயலலிதா மரணம் தொடர்பாக 600 பக்க விசாரணை அறிக்கை தாக்கல் - விசாரணை ஆணையத்தின் அறிக்கை

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தாக்கல் செய்தார். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 600 பக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்த இறுதி விசாரணை அறிக்கை... முதலமைச்சரிடம் ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல்
ஜெயலலிதா மரணம் குறித்த இறுதி விசாரணை அறிக்கை... முதலமைச்சரிடம் ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல்

By

Published : Aug 27, 2022, 12:19 PM IST

Updated : Aug 27, 2022, 2:50 PM IST

சென்னை:ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 14 முறை கால அவகாசம் கோரப்பட்டது. மொத்தாக 154 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அந்த வகையில், ஓ. பன்னீர்செல்வம், சசிகலா உள்பட ஜெயலலிதாவின் பாதுகாவலர்கள், உறவினர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அலுவலர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடந்தது.

இதனிடையே அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்கால தடை பெற்றது. அதன் காரணமாக 2 ஆண்டுகளாக விசாரணை நடக்கவில்லை. அதன்பின் உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் எய்ம்ஸ் மருத்துவக்குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள அனுமதி வழங்கியது.

அதன்படி மருத்துவர் சந்தீப் சேத் தலைமையில் 7 பேர் அடங்கிய எய்ம்ஸ் மருத்துவக்குழு அமைக்கப்பட்டது. இதன் மூலம் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் எந்த ஒரு தவறும் நடைபெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அதன் பின் ஆக 22ஆம் தேதி ஆணையம் சார்பாக முதலமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பிக்க நேரம் கேட்கப்பட்டது. முதலமைச்சரின் பணி சுமைகள் காரணமாக நேரம் ஒதுக்கப்படவில்லை. இந்த நிலையில், இன்று முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த ஆறுமுகசாமி தமிழில் 608 பக்கங்களும், ஆங்கிலத்தில் 500 பக்கங்களும் கொண்ட இறுதி அறிக்கையை தாக்கல் செய்தார்.

அதன் பின் சென்னை எழிலகத்தில் உள்ள விசாரணை ஆணைய அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,” ஜெயலலிதா நோய்வாய்பட்டு மருத்துவமனை அழைத்து வரும் முன் அவரது உடல் நிலை எப்படி இருந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டப்பின் எப்படி இருந்தது என்று 2 பிரிவாக அறிக்கையை சமர்ப்பித்துள்ளோம். மொத்தம் 154 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளோம்.

விசாரணையை நான் தாமதப்படுத்தியதாக கூறுகிறார்கள். 1 வருடத்தில் 149 சாட்சியங்களை விசாரித்துள்ளேன். இந்த வாதத்தை உச்ச நீதிமன்றத்தில் வைத்தபோதுகூட இந்த ஆணையம் நீதிமன்றம் போலவே செயல்பட்டுள்ளது என்று நீதிபதி தெரிவித்தார். விசாரணை ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடை காலத்திற்கு பின் 2 சாட்சியங்கள் மட்டுமே விசாரிக்கப்பட்டது. 1 ஆண்டுக்குள் அணைத்து சாட்சியங்களையும் விசாரித்து விட்டோம் என்பது தான் உண்மை.

விசாரணை அறிக்கையை அரசிடம் சமர்பித்துள்ளேன் அதை வெளியிடலாமா வேண்டாமா என்பதை அரசு தான் முடிவு செய்ய வேண்டும். விசாரணை நடத்துவதற்கு சசிகலாவிற்கு சம்மன் அளித்தோம். அவர் வரவில்லை என்றபின் ஒருவரை கட்டாயப்படுத்த விரும்பவில்லை. அதானால் எழுத்து பூர்வமாக வாங்கி கொண்டேன். விசாரணை ஆணையத்தின் விசாரணைக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்தனர்.

ஜெயலலிதாவின் உடல்நிலை, அதற்கு அவர் மேற்கொண்ட கவனிப்புகள், அவரை யார்யரெல்லாம் கவனித்தார்கள் என்பதெல்லாம் குறித்து விசாரிக்கப்பட்டது. விளம்பரத்திற்காக ஒருவர் வெளியிட்ட எய்ம்ஸ் அறிக்கையை பார்த்த பின் நிறைய யோசனைகள் கிளம்பியது. எத்தனையோ ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. என் ஆணையத்திற்கு மட்டும் பணம் அதிகம் செலவாகிறது என்று கூறியது ஏன்? இந்த ஆணையத்தில் பணியாற்றிய பலர் ஓய்வு பெற்று பென்சன் வாங்குகிறவர்கள் மீதமுள்ளவர்கள் பணியில் உள்ளவர்கள்.

விசாரணைக்கு யார் குறுக்கீடும் இல்லை. எனது விசாரணை திருப்திகரமாக இருந்தது, அதை அறிக்கையாக சமர்பித்துள்ளேன்" என்றார். அதோடு இந்த விசாரணை அறிக்கை நாளை மறுநாள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யபடஉள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஜெயலலிதா மரணம் தொடர்பாக 600 பக்க விசாரணை அறிக்கை தாக்கல்

Last Updated : Aug 27, 2022, 2:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details