தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

சிறுவனுக்கு உடல் முழுவதும் சூடு வைத்து கொடுமை - தந்தை உள்பட இருவர் கைது - திருமணத்தை மீறிய உறவு

எட்டு வயது சிறுவனுக்கு உடல் முழுவதும் சூடு வைத்து கொடுமைபடுத்திய தந்தையையும், அவர் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்த பெண்ணையும் குடியாத்தம் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுவனுக்கு உடல் முழுவதும் சூடு வைத்து கொடுமை
சிறுவனுக்கு உடல் முழுவதும் சூடு வைத்து கொடுமை

By

Published : Sep 1, 2021, 10:51 AM IST

வேலூர்: சிறுவனை கொடூரமாக சித்திரவதை செய்த தந்தையையும், அவரது காதலியையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

குடியாத்தத்தை சேர்ந்த நபருக்கு பத்து, எட்டு வயதில் இரு மகன்கள் உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சிறுவர்களின் தாய் தற்கொலை செய்து கொண்டார். தாயை இழந்த குழந்தைகள் தந்தையுடன் வசித்து வந்துள்ளனர்.

இதனிடையே, அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் சிறுவர்களின் தந்தைக்கு திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த பெண், அவரது கணவருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, இவருடன் வந்து ஒரே வீட்டில் சேர்ந்து வசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து, அப்பெண் முதல் மனைவியின் குழந்தைகளை சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. உச்சகட்டமாக காதலனின் இரண்டாவது மகனின் முதுகு, கை, கால்கள், பாதம், பிறப்புறுப்பு உள்ளிட்ட பகுதிகளில் சூடு வைத்து சித்தரவதை செய்துள்ளார்.

இந்நிலையில், நேற்று (ஆக 31) காலை சித்திரவதை தாங்க முடியாமல், சூடு வைக்கப்பட்ட சிறுவன் அவருடைய வீட்டில் இருந்து தப்பித்து, அருகிலுள்ள பெரியம்மா வீட்டிற்கு ஓடி சென்று நடந்ததை கூறியுள்ளார்.

அதிர்ச்சி அடைந்த சிறுவனின் உறவினர்கள், அவரை காவல் நிலையம் அழைத்து சென்று புகார் அளித்தனர். உறவினர்கள் கொடுத்த புகாரின்பேரில் சிறுவனின் தந்தை, அவரின் காதலியை கைது செய்த குடியாத்தம் காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எட்டு வயது சிறுவனுக்கு உடல் முழுவதும் வைக்கப்பட்ட சூடு

மேலும், காயமடைந்த சிறுவனை, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் காவல் துறையினர் அனுமதித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details