ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த மல்லியம்தூர்க்கம் பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டத்தை கண்காணிக்க கடம்பூர் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நாட்டுத் துப்பாக்கியுடன் திரிந்த நபர் கைது! - erode country gun
கடம்பூர் மலைப்பகுதியில் துப்பாக்கியுடன் திரிந்த நபரை காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
![நாட்டுத் துப்பாக்கியுடன் திரிந்த நபர் கைது! நாட்டு துப்பாக்கியுடன் திரிந்த நபர் கைது](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-12594178-thumbnail-3x2-crime.jpg)
நாட்டு துப்பாக்கியுடன் திரிந்த நபர் கைது
அப்போது காவலர்களைக் கண்டதும் அங்குள்ள புதரில் பதுங்கிய நபரை காவல் துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்தனர். விசாரணையில், அந்நபர் அதே ஊரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பதும், வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கு நாட்டுத் துப்பாக்கியுடன் திரிந்ததாகவும் தெரியவந்தது.
அவருக்கும், மாவோயிஸ்ட் குழுவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அரசிடம் அனுமதி பெறாமல் நாட்டுதுப்பாக்கி வைத்திருந்தாக கிருஷ்ணமூர்த்தியை காவல் துறையினர் கைதுசெய்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.