கரூர்: ஊரடங்கு காலத்தில் அரசு மற்றும் தனியார் மதுபான கடைகள் காலவரையின்றி மூடப்பட்டு உள்ளதால் அதிக அளவில் கஞ்சா விற்பனை நடைபெற்று வந்தது.
இதனை தடுக்க கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.சுந்தரவடிவேல் உத்தரவின்பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் நடைபெற்று வருகிறது.
வேலாயுதம்பாளையம் அருகே ஜீன் 23ஆம் தேதி, மேல் ஒரத்தையை சேர்ந்த ரூபன்குமார் (27) என்ற இளைஞரை கஞ்சா விற்ற போது காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவருடன் தொடர்புடைய மூன்று பேரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், கந்தன் என்பவர் வெளிமாவட்டத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து ஆத்தூர் சமத்துவபுரம் பகுதியில் பதுக்கிவைத்து, விற்பனை செய்து வந்துள்ளார்.
இவரை நேற்று(ஜூன் 24) மாலை வெங்கமேடு ரயில்வே மேம்பாலம் பகுதியில் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 கிலோ கஞ்சாவையும் கைப்பற்றினர்.
முதல்கட்ட விசாரணையில், போதைக்கு அடிமையான இளைஞர்களை வைத்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கந்தசாமி கஞ்சா விற்பனை மேற்கொண்டது தெரியவந்தது. பின்னர் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், கந்தசாமியை 15 நாள்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தை மீட்பு!