தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

ஓணம் பண்டிகையை கொண்டாட சென்ற ஐடி ஊழியர் வீட்டில் கொள்ளை - chennai news

ஓணம் பண்டிகை கொண்டாட கேரளா மாநிலம் சென்ற ஐடி நிறுவன ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை, எல்.இ.டி. டிவி, விலை உயர்ந்த கேமரா உள்ளிட்ட பொருள்களை கொள்ளையடித்து சென்ற நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

tambaram theft
tambaram theft

By

Published : Aug 23, 2021, 10:35 PM IST

சென்னை: தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் மோகன் நகரின் வசித்துவரும் கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த ஹரிஸ்குமார், கிண்டியில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

ஓணம் பண்டிகை கொண்டாடுவதற்காக ஹரிஸ்குமார் குடும்பத்துடன் கேரள மாநிலம் கோட்டயம் சென்றுள்ளார். பின்னர், பண்டிகை கொண்டாடி விட்டு வீட்டிற்கு வந்த ஹரிஸ்குமார் உள்ளே சென்று பார்த்த போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 10 சவரன் தங்க நகை, எல்.இ.டி டிவி, விலையுயர்ந்த கேமரா ஆகியவை கொள்ளைபோனது தெரியவந்தது.

இது குறித்து ஹரிஸ்குமார் சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கருவி பதிவுகள் மூலம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details