திண்டுக்கல்:வத்தலக்குண்டு அருகே திண்டுக்கல் நெடுஞ்சாலையில் பட்டிவீரன்பட்டி காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்த போது, அந்த வழியாக சைரன் வைத்த ஜீப்பில் வந்து, காவல் துணை ஆணையர் எனக் கூறி மிரட்டிய சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த விஜயன் என்பவரை, சந்தேகத்தின் அடிப்படையில் கைது காவல்துறையினர் விசாரணை செய்தனர்.
அதில், அவர் போலியாக தன்னை துணை ஆணையர் என கூறி ஏமாற்றியது தெரிய வந்ததும், காவல்துறையினர் விஜயனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பல்வேறு மாநில முதலமைச்சர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் காவலர் உடையில் சுற்றித் திரிந்த புகைப்படங்களை வைத்து விஜயனை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.