தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

ரூ.200 மதிப்பிலான சொத்தை ரூ.25 கோடிக்கு ஏலம் விட்டு மோசடி - முன்னாள் எஸ்பிஐ தலைவர் கைது!

வாராக்கடனுக்காக கையகப்படுத்திய சொகுசு விடுதி ஒன்றின் விலையை குறைந்த விலைக்கு விற்று மோசடி செய்த வழக்கில் எஸ்.பி.ஐ. வங்கி முன்னாள் தலைவர் பிரதீப் செளத்ரி கைது செய்யப்பட்டுள்ளார்.

Former SBI chairman, Pratip Chaudhary, Jaisalmer Police, CJM Court of Jaisalmer, SBI, SBI chairman held, எஸ் பி ஐ தலைவர் பிரதிப் செளத்ரி, ஜெய்சால்மர், ஜெய்ப்பூர்
எஸ்பிஐ அலுவலர் கைது

By

Published : Nov 1, 2021, 9:02 PM IST

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் உள்ள தனியார் சொகுசு விடுதி ஒன்றின் கடன் மோசடி வழக்கில் எஸ்பிஐ முன்னாள் தலைவர் பிரதீப் செளத்ரி அவரது டெல்லி இல்லத்தில் ஜெய்சால்மர் காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான அல்கெமிஸ்ட் ஏஆர்சி நிறுவனத்தின் அலோக் திர் தலைமறைவாகியுள்ளார்.

கோடவன் குழுமம் 2008ஆம் ஆண்டு சொகுசு விடுதி கட்டுவதற்காக எஸ்பிஐ நிறுவனத்திடம் ரூ.24 கோடி கடனாகப் பெற்றுள்ளது. அப்போது இந்த குழுமத்தின் மற்றொரு விடுதி செயல்பட்டு வந்தது.

பின்னர், அந்தக் குழு கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால், வங்கி, அதைச் செயல்படாத சொத்தாகக் கருதி, இரண்டு விடுதிகளையும் பறிமுதல் செய்தது. அப்போது எஸ்பிஐ தலைவராக பிரதீப் செளத்ரி இருந்தார். இந்த விடுதிகள் அல்கெமிஸ்ட் ஏஆர்சி நிறுவனத்திற்கு ரூ.25 கோடிக்கு விற்கப்பட்டது.

2016ஆம் ஆண்டு அல்கெமிஸ்ட் ஏஆர்சி விடுதிகளை கைப்பற்றியது மற்றும் 2017ஆம் ஆண்டு சொத்து மதிப்பீட்டின் போது, சந்தை விலை 160 கோடி ரூபாய் என்று கண்டறியப்பட்டது. சௌத்ரி ஓய்வுக்குப் பிறகு அல்கெமிஸ்ட் ஏஆர்சி நிறுவனத்தில் இயக்குநராக சேர்ந்தார்.

தற்போது இந்த சொத்துகளின் விலை 200 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய மதிப்புள்ள இந்த விடுதிகள் குறைந்த விலைக்கு விற்கப்பட்டதை எதிர்த்து கோடவன் குழுமம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த ஜெய்சால்மரில் உள்ள தலைமை நீதிமன்றம், பிரதீப் செளத்ரி, அலோக் திர், ஆர்.கே.கபூர், எஸ்.வி.வெங்கடகிருஷ்ணன், சசி மெத்ததில், தேவேந்திர ஜெயின், தருண், விஜய் கிஷோர் சக்சேனா ஆகியோருக்கு கைது ஆணை பிறப்பித்தது. இந்நிலையில் சௌத்ரி டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டு ஜெய்சால்மருக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதையும் படிங்க:கடந்த ஆட்சியில் கணக்கில் வராத 2000 கோடி நிதி மீட்கப்பட்டுள்ளது - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

ABOUT THE AUTHOR

...view details