ஈரோடு: சென்னிமலை அருகே எல்லை கிராம ஊராட்சிக்குள்பட்ட குமாரபாளையம் என்ற கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தில் தொழிலாளர்கள் பணியாற்றிக்கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களை தேனீக்கள் கொட்டியதில், பழனிச்சாமி (80) என்பவர், வலி தாங்க முடியாமலும், தேனீக்களிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அருகிலிருந்த கீழ்பவானி வாய்க்கால் உரம்பு நீர் குட்டையில் குதித்ததால், சேற்றில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.