கர்நாடகா மாநில பெங்களூருவில் இளைஞர்களை குறிவைத்து போதைப் பொருள் விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் பேரில் விசாரணை மேற்க்கொண்ட காவல் துறையினர் போதைப் பொருள் விற்பனை செய்ததாக நைஜீரிய நாட்டைச் சேர்ந்த அகஸ்டின் ஒகாஃபோர் (38), அச்சுனேஜே நாஃபோர் (36) ஆகியோரை கைது செய்யதனர். இதில், அவர்களிடமிருந்து இருபது கிராம் மருந்துகள், ஆறு மொபைல் போன்கள், ஒரு ஹோண்டா கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.