ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

ஏகாம்பரநாதர் கோயில் வழக்கு மீண்டும் காவல்துறைக்கு மாற்றம் - ஏகாம்பநாதர் கோயில்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்காக செய்யப்பட்ட சோம ஸ்கந்தர் சிலையில் முறைகோடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவிலிருந்து சிவகாஞ்சி காவல்துறைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏகாம்பரநாதர் கோயில் ஸ்கந்தர் சிலை முறைகேடு வழக்கு மீண்டும் காவல்துறைக்கு மாற்றம்
ஏகாம்பரநாதர் கோயில் ஸ்கந்தர் சிலை முறைகேடு வழக்கு மீண்டும் காவல்துறைக்கு மாற்றம்
author img

By

Published : Jul 23, 2022, 9:18 PM IST

சென்னை:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோமாஸ்கந்தர் சிலையில் சேதங்கள் ஏற்பட்டதால், புதிதாக தங்க சிலை செய்யப்பட்டது. இதற்காக 100 கிலோ தங்கம் வசூலிக்கப்பட்டது. ஆனால் செய்யப்பட்ட சிலையில் ஒரு சதவீதம் கூட தங்கம் இல்லை என்று அண்ணாமலை என்பவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதனடிப்படையில் வழக்குப்பதிந்து விசாரிக்க, சிவகாஞ்சி காவல்துறைக்கு காஞ்சிபுரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, இந்து சமய அறநிலையத் துறை அப்போதைய ஆணையர் வீர சண்முகமணி, திருப்பணிப் பிரிவு கூடுதல் ஆணையர் கவிதா, சிலையை வடிவமைத்த ஸ்தபதி முத்தையா, ஸ்தனிகர்கள் உள்ளிட்ட ஒன்பது பேர் மீது 2018ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை, 2019ஆம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு, விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கூடுதல் ஆணையர் கவிதா, முத்தையா ஸ்தபதி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனு விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு, நன்கொடையாளர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்ததை தவிர வேறு எந்த விசாரணையும் மேற்கொள்ளாதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டு, வழக்கை மீண்டும் சிவகாஞ்சி காவல்துறைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு மீது நம்பிக்கை வைத்து இந்த வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதித்த நிலையில், நான்கு ஆண்டுகளாக எந்த விசாரணையும் நடத்தாதது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதி, வழக்கு தொடர்பான ஆவணங்களை சிவகாஞ்சி காவல்துறையிடம் ஒப்படைக்கும் படி சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு உத்தரவிட்டார்.

இந்த வழக்கின் விசாரணையை 90 நாட்களில் முடித்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய சிவகாஞ்சி காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, மனுக்களை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க: ஆர்.பி. உதயகுமாருக்கு எதிர்கட்சி துணை தலைவர் பதவி! தென்மாவட்டங்களை சரி செய்ய ஈபிஎஸ் முயற்சியா?

ABOUT THE AUTHOR

...view details