தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

கடத்தல் வழக்கில் கைதானவரின் சொத்துகள் முடக்கம் - அமலாக்கத்துறை அதிரடி - Smuggler Selvaraj

செம்மரக்கட்டை மற்றும் சந்தனக்கட்டை கடத்தல் வழக்குகளில் கைதானவரின் 7.54 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர்.

அமலாக்கத்துறை
செம்மரக்கட்டை கடத்தியவரின் சொத்து முடக்கம்

By

Published : Mar 30, 2022, 6:23 AM IST

சென்னை: செம்மரக்கட்டை மற்றும் சந்தனக்கட்டை கடத்தியதாக செல்வராஜ் என்பவர் மீது ஆந்திர போலீசார், சென்னை சுங்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கை அடிப்படையாக வைத்து அமலாக்கத்துறை அந்நிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் செம்மரம் மற்றும் சந்தனக்கட்டை கடத்தல் மூலமாக சம்பாதித்த பணத்தை வைத்து பல்வேறு அசையா சொத்துக்களை வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தின் மூலம் சஞ்சனா மெட்டல் வேர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் நடத்தப்படுவது வெளிசத்திற்கு வந்துள்ளது.

தொடரும் விசாரணை: இந்நிலையில், ஆத்தூர், செங்குன்றம், புது எருமைவெட்டி பாளையம் பகுதிகளில் உள்ள எட்டு குடியிருப்புகள், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆறு பிளாட்டுகள், சென்னை வீனஸ் காலனி 2ஆவது தெருவில் உள்ள ஒரு வீடு, பாண்டிச்சேரி கிருஷ்ணா நகரில் உள்ள வீடு, அசையா சொத்து சுமார் 2.07 கோடி மதிப்பிலான சஞ்சனா மிட்டல் நிறுவனத்தை அமலாக்கத்துறையினர் முடக்கி உள்ளனர்.

முடக்கப்பட்ட சொத்துக்களின் மொத்த மதிப்பு 7.54 கோடி ரூபாய் என அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர்கள் கூறினர்.

இதையும் படிங்க: இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு - பரபரப்பு நிமிடங்கள்

ABOUT THE AUTHOR

...view details