சென்னை, ஏம்ஜிஆர் நகர், வெங்கட்ராமன் தெருவை சேர்ந்தவர் செல்வம் (48). இவர் சென்னை ஜாபர்கான் பேட்டையில் மீன் வியாபாரம் செய்து வருகிறார்.
இவருக்கு பிரகாஷ் (21) என்கிற மகன் உள்ளார். பிரகாஷ் பத்தாம் வகுப்பு முடித்த நிலையில், போதைக்கு அடிமையாகி ஊர் சுற்றுவதை வழக்கமாக வைத்திருந்தார். அவ்வப்போது பெயிண்டிங் வேலைக்கும் சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்றிரவு பிரகாஷ் மது அருந்திவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். அச்சமயம் பிரகாஷ் மது அருந்தியிருப்பதைக் கண்டு அவரது தந்தை செல்வம், பிரகாஷைக் கண்டித்துள்ளார்.
இதில் ஒரு கட்டத்திற்கு மேல் ஆத்திரமடைந்த பிரகாஷ், சமையல் அறைக்குள் சென்று கத்தியை எடுத்து வந்து தனது தந்தையை சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தொடர்ந்து இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எம்ஜிஆர் நகர் காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து செல்வத்தின் உடலை உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே தந்தையைக் கொலை செய்த பிரகாஷை அப்பகுதி மக்கள் சரமாரியாக அடித்துள்ளனர். இதுகுறித்தான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து காவல் துறையினர் பிரகாஷை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:'நீட் தேர்வு அச்சத்தால் சேலம் மாணவர் தற்கொலை'