மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஸ்ரீநகரில், பிரபல ஆன் லைன் விற்பனை நிறுவனமான ஃபிளிப் கார்ட் நிறுவன பொருட்களை டெலிவரி செய்யும் இ-கார்ட் என்ற அலுவலகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் வாசலின் முன் அமர்ந்து, சீர்காழி அருகே கோவில்பத்து கிராமத்தை சேர்ந்து சரவணன், அரவிந்தன், மனோ,அபினேஷ், தினேஷ் ஆகிய 5 பேர் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். கடையின் முன் அமர்ந்து மது அருந்தியதைத் தட்டிக் கேட்ட இ - கார்ட் நிறுவன ஊழியர் சூர்யாவை அந்த போதைக் கும்பல், அலுவலகத்திற்குள் புகுந்து, சரமாரியாக தாக்கி அலுவலகத்தில் இருந்த கம்பியூட்டர், பணமெண்ணும் இயந்திரம், நாற்காலி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அடித்து உடைத்தனர். அலுவலகத்தில் வைத்திருந்த ரூ.6,800 கொள்ளை அடித்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். அலுவலகத்தில் புகுந்து ஊழியரை தாக்கி, அலுவலக பொருட்களை அடித்து நொருக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஃபிளிப்கார்ட் ஊழியரைத் தாக்கி, அலுவலகத்தை நொறுக்கும் போதை கும்பல்! - மயிலாடுதுறை குற்றச் செய்திகள்
சீர்காழியில், கடையின் முன் அமர்ந்து மது அருந்தியதைத் தட்டிக் கேட்ட ஃபிளிப்கார்ட் ஊழியரை போதைக் கும்பல் தாக்கி, அலுவலகத்தை அடித்து நொறுக்கும் சிசிடிவி காட்சி சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஃபிளிப் கார்ட் ஊழியரைத் தாக்கும் போதை கும்பல்
இந்த சம்பவம் குறித்து இ.கார்ட் டெலிவரி நிறுவன மேலாளர் தாவீதுராஜா சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்தன் பேரில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தலைமறைவாக உள்ள 5 பேரையும் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:ஒரு மாதத்தில் 20 முதியவர்களிடம் நூதன முறையில் வழிப்பறியில் ஈடுபட்ட திருடன் கைது