தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

ட்ரோன் மூலம் போதைப் பொருள் கடத்தல் - பிடிபட்ட 6 கிலோ ஹெராயின் - ஹெராயின்

இந்தியா - பாகிஸ்தான் பஞ்சாப் எல்லையில், பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் கடத்தப்பட்ட 6 கிலோ ஹெராயின் போதைப் பொருளை எல்லை பாதுகாப்புப் படையினர் கைபற்றினர்.

ஹெராயின்
ஹெராயின்

By

Published : Sep 10, 2021, 11:04 PM IST

அமிர்தசரஸ் (பஞ்சாப்):எல்லையில் ட்ரோன் மூலம் போதைப் பொருள் கடத்த முற்பட்டபோது, எல்லை பாதுகாப்புப் படையினர் ட்ரோன் மீது துப்பாகியால் சுட்டு, 6 கிலோ ஹெராயினை கைபற்றியுள்ளனர்.

எல்லையில் பாதுகாப்புப் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு பொருள் எல்லை தாண்டி பறப்பதைக் கண்டுள்ளனர். உடனடியாக அதன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில், அது ட்ரோன் என்பது தெரியவந்துள்ளது.

அதன் மீது 6 கிலோ ஹெராயின் போதைப் பொருள் இணைக்கப்பட்டு பறக்கவிடப்பட்டது சோதனையில் தெரியவந்தது. இது குறித்து விசாரணை நடத்திய எல்லை பாதுகாப்புப் படை, பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு போதைப் பொருள் கடத்த முற்பட்டதை கண்டுபிடித்துள்ளனர்.

பாதுகாப்புப் படை நடத்திய பலகட்ட தேடுதல் மற்றும் சோதனை முயற்சிகளில், இதுவரை 324.509 கிலோ போதைப் பொருள்கள் கைபற்றப்பட்டுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details